
Kanaa Official Trailer : சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படத்தின் ட்ரைலரை பிரபல கிரிக்கெட் வீரரான அஸ்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் கனா. பாடகரான அருண் ராஜா காமராஜ் இயக்கும் முதல் படம் இது.
இந்திய கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் சிவாவும் அவரது மகள் ஆராதனாவும் சேர்ந்து பாடியிருந்த வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் யூ ட்யூபில் மிக பெரிய அளவில் சாதனை படைத்து இருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thrilled to launch the heart-warming trailer of my friend @Siva_Kartikeyan's #Kanaa, a sports drama based on Women's cricket.
I hope the movie inspires girls of our country to take up the sport professionally. Dear girls, it's time to dream big! ????????https://t.co/HKDR5sdABw
— Ashwin Ravichandran (@ashwinravi99) November 25, 2018