coolie and kaithi-2 movie delay : director lokesh kanagaraj feel..
coolie and kaithi-2 movie delay : director lokesh kanagaraj feel..

பயிற்சியும் முயற்சியும் சரியாக இருந்தாலும், சமயத்தில் இயற்கையும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் போல. அப்டிதான், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிஸியான ஷெட்யூலில் திடீரென ஏற்பட்ட பின்னடைவு. விஷயத்திற்கு என்னன்னா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,”ஜெயிலர்” திரைப்படத்தை அடுத்து, ஞானவேல் இயக்கத்தில் “வேட்டையன்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், தற்பொழுது தனது அடுத்த திரைப்பட பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். “இந்த நிலையில், வேட்டையன்” திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

வெளியூரில் லோகேஷ் கனகராஜின் “கூலி” திரைப்பட பணிகளில் பிஸியாக நடித்து வந்த ரஜினிகாந்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி உடல் நல குறைவு ஏற்பட்டது. அவருடைய இருதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் சிறிய வீக்கம் இருந்த நிலையில், அதற்கான சிகிச்சைகள் செய்யப்பட்டு, தற்பொழுது நல்ல ஓய்வில் அவர் இருந்து வருகிறார்.

விரைவில் அவர் வீடு திரும்பவுள்ள நிலையில், சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு தான், அவர் தனது “கூலி” திரைப்பட பணிகளை துவங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ‘கூலி’ திரைப்பட பணிகளை முடித்தவுடன், அடுத்தபடியாக தனது ‘கைதி 2’ பணிகளை துவங்குவதாக இருந்தார்.

ஆனால், தற்பொழுது ரஜினிகாந்தின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கூலி திரைப்படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட்டு, தன்னுடைய ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அவரால் செல்ல முடியுமா? என்ற கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. ‘கைதி’ திரைப்படம் தான் லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்சில் முதல் முதலில் வெளியான திரைப்படம்.

இந்நிலையில், ஏற்கனவே தனது “மெய்யழகன்” திரைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகர் கார்த்தி, கைதி 2, சர்தார் 2, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் திரைப் பறவைகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், லோகேஷ் வரும்போது, கார்த்தி பல படத்துல பிஸியா இருந்தா.. மேலும் ஃபீல் தான்..