cooku with comali title winner shrutika participate in hindi bigg boss season-18
cooku with comali title winner shrutika participate in hindi bigg boss season-18

‘நினைச்சது கிடைக்கலன்னா, கிடைச்சதை வெச்சு வாழப் பழகிக்கனும்’ என்பதுகூட அழகான தத்துவ முத்துதானே.! அது யார் யாருக்கு, எப்படி பொருந்துகிறதோ.. இல்லையோ., ஆனால், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ஒரு தேவதைக்கு பொருந்துகிறது. அதாவது, ‘பிக்’ ஆன மேட்டரு என்னன்னா..

பரபரப்பாக நிகழும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்ல.. இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. இதில், தமிழ் பிக்பாஸை இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

அதேபோல் தெலுங்கு பிக்பாஸை நாகார்ஜுனாவும், கன்னட பிக்பாஸை சுதீப்பும், மலையாள பிக்பாஸை மோகன்லாலும், இந்தி பிக்பாஸை சல்மான் கானும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இதில், பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய இந்தியில், இதுவரை 17 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த 17 சீசன்களையும் சல்மான்கான் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். நேற்றும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தொடங்கியதை போல், இந்தியில் 18-வது சீசன் தொடங்கி உள்ளது. வழக்கம்போல் சல்மான்கான் தான் இம்முறையும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், அதில் புதிய ட்விஸ்ட் ஆக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜய் டிவி பிரபலம் ஒருவர் பங்கேற்று இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ஸ்ருதிகா அர்ஜுன் தான். இவர் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ என்கிற படத்தில் நடித்தவர்.

அதன் பின்னர், திருமணமாகி செட்டில் ஆன ஸ்ருதிகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி, பைனல் வரை சென்று டைட்டிலையும் தட்டிச் சென்றார். அவர், தற்போது டைட்டில் வெல்லும் முனைப்போடு இந்தி பிக்பாஸில் களமிறங்கி இருக்கிறார்.

தமிழ் நாட்டு பிரபலங்கள் பிற மாநில பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது புதிதல்ல, இதற்கு முன்னர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், ஷகீலா, கிரண், பிந்து மாதவி போன்ற தமிழ்நாட்டு பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அந்த வகையில், ஸ்ருதிகா தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். இருப்பினும், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல் தமிழ் பெண் ஸ்ருதிகா என்பது குறிப்பிடத்தக்கது.

அது சரி, தமிழில், சூர்யாவுக்கு அக்கா, அம்மா கேரக்டர் வந்தா ஸ்ருதிகா நடிப்பாங்களா.?