
தனது திருமண பற்றி ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஷெரின்.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின்.

இதைத்தொடர்ந்து விசில் படத்தில் அழகிய அசுரா என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். மேலும் சில படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஐட்டெல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் என்ட்ரி கொடுத்தார்.
மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சமூக வலைதள பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
புகழுடன் ஏன் சண்டை போடுகிறீர்கள் என கேட்க அது கண்டன்டுக்காக போடுவது மற்றபடி எங்களுக்கு இடையே எந்த பிரச்சினையும் கோபமும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

இன்னொரு ரசிகர் உங்களுக்கு எப்போது திருமணம் எனக் கேட்க ஜாதகப்படி அக்டோபர் மாதத்தில் நடக்கும் என சொல்லி இருக்கிறார்கள். அடுத்த மாதம் என காட்டுகிறது. என்னுடைய கல்யாணத்தை சீக்கிரம் பிளான் பண்ணி இருக்கேன் என தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். மேலும் மாப்பிள்ளை யார் என்று கேள்வியும் எழுந்துள்ளது.