குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

Web Ads

குக் வித் கோமாளி சீசன் 6 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

cook with comali season 6 contestant update
cook with comali season 6 contestant update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்க உள்ளது.

ஏற்கனவே முதல் நான்கு சீசனங்களில் வெங்கடேஷ் பட் மற்றும் செப் தாமு இருவரும் நடுவர்களாக இருந்த நிலையில் ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்றிருந்தார் தற்போது ஆறாவது சீசனில் அவர்களுடன் சேர்ந்து மூன்று பேர் நடுவராக இருப்பார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

அந்த மூன்றாவது செஃப் யார் என்றால் கௌஷிக் தான். அவரும் இவர்களுடன் சேர்ந்து நடுவராக பங்கேற்க உள்ளார் இது மட்டுமில்லாமல் 4 புதிய கோமாளிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

முற்றிலும் புதுவிதமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று பேசப்பட்டு வரும் நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் தற்போது மே மாதம் நான்காம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து புதிய புரோமோ மூலம் வெளியிட்டு உள்ளனர் அதில் புகழ் மற்றும் குரேஷி இருவரும் சீட்டு விளையாடுவது போல் அந்த வீடியோ இருக்கிறது அதில் ஒவ்வொரு சீட்டு எடுத்துப் போடும்போதும் ஒரு போட்டியாளர்களின் முகத்தை அறிமுகப்படுத்துகின்றனர் அப்படி அவர்கள் நான்கு போட்டியாளர்களை அறிவித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா, பிரியா ராமன், உமர் லத்தீப் இந்த நான்கு போட்டியாளர்களை அறிவித்திருக்கின்றனர்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

cook with comali season 6 contestant update
cook with comali season 6 contestant update