குக் வித் கோமாளி புகழுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிசயமானவர்தான் புகழ். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் தனது நகைச்சுவையை தாறுமாறாக வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் இடம் பிடித்து தற்போது வெள்ளி திரையிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது பிசியான நடிகராக வலம் வரும் புகழ் “ஜூ கீப்பர்” என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவர் நீண்ட நாளாக காதலித்து வந்த பென்சியா என்கின்ற பெண்ணை தற்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார். அதாவது வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி திங்கட்கிழமை புகழ் – பென்சியா ஜோடிக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அவர்களின் திருமண பத்திரிக்கை வெளியாகி வைரலாகி வருகிறது.