குக் வித் கோமாளி புகழின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிசயமானவர்தான் புகழ். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் தனது நகைச்சுவையை தாறுமாறாக வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் இடம் பிடித்து தற்போது வெள்ளி திரையிலும் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது பிசியான நடிகராக வலம் வரும் புகழ் “ஜூ கீப்பர்” என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர் நீண்ட நாளாக காதலித்து வந்த பென்சியா என்கின்ற பெண்ணை செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று காலை சிறப்பாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது புகழ் அவரது திருமண புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/pugazh_iam/status/1565191348453380096?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1565191348453380096%7Ctwgr%5E73bb4a7c229eb728a93cb7a870e3f344d3cf5e4c%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F