Commonwealth Fencing Champion Bhavani Devi
Commonwealth Fencing Champion Bhavani Devi

Commonwealth Fencing Champion Bhavani Devi – சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் வாள் சண்டையில் சீனியர் “சேபர்” பிரிவில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த பாவனி தேவி தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கிடையில், நேற்று தமிழகம் திரும்பிய பாவனி தேவிக்கு அவர் பெற்றோர் மற்றும் நண்பர்கள் சிறந்த வரவேற்பு அளித்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பாவனி தேவி பேசினார்.

பாவனி தேவி கூறியது : சர்வதேச போட்டிகளில் வெல்லும் எனது முதல் தங்க பதக்கம் இது. அதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன்.

மேலும் இந்தியாவிருக்கு முதல் தங்க பதக்கம் இது, அதனை நினைத்து பார்த்தால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் கிடைத்து உள்ளது,

மற்றும், தமிழக மக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளனர், எனது இந்த வெற்றியை அதாவது இந்த தங்க பதக்கதை எனது தமிழக மக்களுக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் உத்தரவால் நான் எஸ்.டி.ஏ.டி – யின் எலைட் திட்டதில் சேர்ந்தேன் அதன் மூலம் சர்வதேச போட்டிகளில் பங்குப்பெறவும், வெளிநாடுகளில் பயிற்சிப்பெறவும் எளிதாக இருந்தது.

இந்த வெற்றிக்கு தமிழக அரசு பெரிதும் உதவியாக இருந்தது.

மேலும். தமிழக அரசு, முதல் அமைச்சர், விளையாட்டு துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் என்றும் கூறினார்.

அதோடு, இந்த வெற்றி எனக்கு மற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற பெரிதும் ஊக்குவிப்பாக உள்ளது.

அடுத்து நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பும் கிடைக்கும் என்று நம்புகிறேன். என்று கூறினார்.