Comedy Actress

Comedy Actress : வறுமையில் தவிக்கும் பிரபல நடிகை குறித்த செய்தி குறிப்பை பதிவிட்டு விஷால் மற்றும் நடிகர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

திரையில் எள்ளளவோ நடிகர்கள் தோன்றுகின்றனர், படங்களில் நடிக்கின்றனர். ஆனால் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் வளர்ச்சி அந்த அளவிற்கு உயர்ந்து விடுவதில்லை.

பல நடிகைகள் இன்று வரை வாய்ப்பு கிடைக்காமல் வயது முதிர்ந்த நிலையில் ஒரு வேளை சாப்பாட்டிற்காகவே கஷ்டப்பட்டு வருகின்றனர்.

நலிவடைந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கமும் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பிரபல தயாரிப்பாளரான தனச்செழியன் அவர்கள் பிரபல காமெடி நடிகை ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு வறுமையில் வாடும் அவருக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.