குவியும் எதிர்மறை விமர்சனங்களால் கோப்ரா படக்குழு முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் சியான் விக்ரம் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று வெளியான திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

கிட்டத்தட்ட எட்டு கெட்டப்புகளில் விக்ரம் நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இர்பான் பதான் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ரன்னிங் டைம் பலருக்கும் பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. படம் மிக நீளமாக இருப்பதால் பல இடங்களில் சலிப்பு ஏற்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் படக்குழு கிட்டத்தட்ட 30 நிமிட காட்சிகளை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் 30 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு புதிய வெர்ஷன் திரையரங்குகளில் மாற்றி திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.