மற்ற திரைப்படங்களை விட கோப்ரா திரைப்படத்தின் நேர அளவு அதிகமாக இருப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகர் தான் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள “கோப்ரா” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் இப்படத்திற்கான போஸ்டர்ஸ் மற்றும் சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் கோப்ரா திரைப்படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் அளித்துள்ளது. மேலும் இப்படத்தின் நேர அளவு 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என குறிப்பிட்டுள்ளது. மற்ற படங்களை விட இப்படத்திற்கான நேர அளவு அதிகமாக இருப்பதினால் இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.