முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தையும் மூத்த நடிகருமான கிருஷ்ணா நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் மகேஷ் பாபுவின் தாயார் மரணம் அடைந்த சம்பவம் அவரது குடும்பத்துக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அதிலிருந்து மீள்வதற்குள் அவருடைய தந்தையின் மரணம் மகேஷ்பாபுவின் குடும்பத்தையும், திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் மரணத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் CM ஸ்டாலின் அவரது சமூக வலைதள பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.

அதில் அவர், மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மறைவு செய்தி அறிந்து துயரமடைந்தேன், தெலுங்கு திரையுலகில் பல புதுமையான விஷயங்களுக்கு முன்னோடியாக இருந்தவர். அவரது மறைவு இந்திய சினிமாவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. மகேஷ் பாபு குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.