CM Palanisamy Announced
CM Palanisamy Announced

CM Palanisamy Announced – சென்னை: கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடும் போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறினார்.

கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மற்றும் மின் நிலையங்கள் பெரும் அளவில் சேதம் அடைந்தன.

இதனால் இரவு பகல் பாராமல், 24 ஆயிரத்து 924 மின் ஊழியர்கள் மின்கம்பங்கள் மின்மாற்றி போன்றவற்றை சீர்செய்து வருகின்றனர்.

மின் ஊழியர்கலின் இப்பணியை மனதார வாழ்த்துகிறேன்.

நாகபட்டினம் மாவட்டம், கோகூர் கிராமத்தை சேர்ந்த வயர்மன் சண்முகம், ‘கடந்த 16- ஆம் தேதி மின்கம்பங்கள் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்’.

இதேபோன்று பலர் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், “புயல் பாதித்த இடங்களில் மின்சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் வழங்கப்படும், மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.