
பிரபல நடிகையான வரலட்சுமி, ஆனால் CM தான், CM தவிர வேறு எதிலும் நடிக்க மாட்டேன் என பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்றில்லாமல் சவாலான எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் துணிந்து நடித்து திறமையை காட்டி வருபவர் வரலட்சுமி.
தற்போதும் சர்கார், சண்டக்கோழி 2, மாரி 2, வெல்வட் நகரம் என அவரது நடிப்பில் உருவாகி வரும் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வாழக்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது? யாராக நடிக்க வேண்டும் என கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு வரலட்சுமி அம்மா என பதிலளித்துள்ளார். மேலும் நடித்தால் அம்மாவாக தான் நடிப்பேன். மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் எனவும் பதிலளித்துள்ளார்.
