CM Kumaraswamy Speech
CM Kumaraswamy Speech

CM Kumaraswamy Speech – கர்நாடகத்தில் உள்ள காவிரியாற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்ட அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு தொடங்கவுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், “எங்கள் நிலத்தில் நாங்கள் அணை கட்டுகிறோம்.

மேகதாது விவகாரத்தில், தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டாம்” என கர்நாடக மாநில அமைச்சர் டி.கே. சிவகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் நேற்று முதல்வர் முன்னிலையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதே சமயம், நேற்று பெங்களூரிலும் முதல்வர் குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் டி.கே. சிவகுமார் பேசுகையில்: “மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். அதற்கு தமிழக முதல்வர் நேரம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்” .

இது குறித்து மேலும் கூறுகையில், “மேகதாதுவுக்கு நான் நேரில் சென்று அணை கட்ட உள்ள இடத்தை பார்வையிட உள்ளேன்.

குடிநீர் பயன்பாடு மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வது தான் இதன் நோக்கம்.

இந்த திட்டம் தமிழகத்திற்கும் உதவும், எங்களின் சட்ட நிபுணர் குழுவினர், தமிழகத்தை தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

மேலும் இந்த நீரை நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு இதில் இருந்து மின்சாரம் கிடைக்கும். இது எங்கள் மாநிலத்தின் உரிமை.

மேலும் இந்த திட்டத்தை எங்களின் சுயநலத்திற்காக மட்டும் நாங்கள் செயல்படுத்தவில்லை.

நாங்கள் கர்நாடக எல்லைக்குள் எங்கள் நிலத்தில் தான் இந்த அணையை கட்டுகிறோம்.

மேலும் நிலம் மற்றும் அதற்கு செலவிடப்படும் நிதி, அனைத்தும் கர்நாடகத்திற்கு சொந்தமானது.

இருப்பினும், இந்த விஷயத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் தயாராக இல்லை என்று முன்னதாகவே தமிழக மாநில அமைச்சர் சண்முகம் கூறி இருக்கிறார்.

எங்களுடன் பேச முடியாது என்று சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும். நாங்கள் தமிழகத்துடன் தகராறு செய்ய மாட்டோம்.

இரு மாநிலத்தினரும் சகோதரர்கள் என்று தான் நாங்கள் எண்ணுகிறோம்” இவ்வாறு கூறினார்.