YouTube video

CM EPS Wishes to Auto Driver Son : மருத்துவ படிப்பு பயில நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு ஆணை பிறப்பித்து ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கடந்த வருடத்தில் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களில் வெறும் 6 பேர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்று இருந்தனர்.

இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளார்.

CM EPS Anouuncement on Corona Vaccine

இந்த நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு பகுதி சூளைமேடு அருணாச்சலம் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேஷ் மற்றும் நாகலட்சுமி தம்பதியரின் மகன் நரசிம்மன் என்பவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழக முதல்வர் அவருக்கு பாராட்டு தெரிவித்து மருத்துவ படிப்பிற்கான ஆணை வழங்கினார்.

தமிழக முதல்வரிடம் பாராட்டை பெற்ற அந்த மாணவரை மாவட்ட அதிமுக செயலாளர் ஆதிராஜாராம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பரிசுகளை வழங்கியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.