bahath Singh
bahath Singh

கோவை அரசு கலை கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி மாலதி. இவர், கடந்த 28 – ஆம் தேதி கோவை அரசு கலை கல்லூரி வளாகத்தில் பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் சஸ்பென்ட் செய்யப்பட்டார் .

இது குறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறும்போது, ” கடந்த 28- ஆம் தேதி மாணவி மாலதி, முறையான அனுமதி பெறாமல் மாணவர்களை திரட்டி நிகழ்ச்சி நடத்தியுள்ளார். நிகழ்ச்சியின் போது கல்லூரியின் நிறை குறைகளை பற்றி பேசியுள்ளார் என்றும் கூறினார்” .

மேலும் அவர், பகத் சிங் பிறந்தநாளை கொண்டாட அனுமதி வழங்கினால், நாளை மற்ற தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாட அனுமதி கேட்பார்கள் எனவும் கூறினார் . பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடியதை குறித்து வரும் 22- ஆம் தேதி மாணவி மாலதியிடம் விசாரணை நடைபெறும் என்றும் கூறினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.