சிம்புக்கு இலங்கை பெண்ணுடன் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் விளக்கம் அளித்துள்ளார் அவரது மேனேஜர்.

தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.

இயக்குனர் டி ராஜேந்திரன் அவர்களின் மகனான இவர் 40 வயதை கடந்து திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். மேலும் நடிகர்களின் திருமணத்திற்காக அவரது குடும்பத்தார் தீவிரமாக பெண் தேடி வருகின்றனர்.

இப்படியான நிலையில் சிம்புவுக்கு இவருடன் திருமணம், அவருடன் திருமணம் என சமூக வலைதளங்களில் அடிக்கடி தகவல் பரவி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சிம்புவுக்கு இலங்கை சார்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் திருமணம் நடக்கப் போவதாக தகவல் பரவியது.

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாக சொல்லப்பட்ட நிலையில் நடிகர் சிம்புவின் மேனேஜர் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என மறுப்பு தெரிவித்துள்ளார். சிம்புவுக்கு திருமணம் என்றால் முதலில் மீடியா நண்பர்களுக்கு தான் தெரியப்படுத்துவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.