மகிழ்ச்சியான பயணமே ‘பறந்து போ’ படம்: இயக்குநர் ராம் நெகிழ்ச்சி..

Web Ads

கற்றது தமிழ், தரமணி, தங்க மீன்கள் போன்ற படங்களை தொடர்ந்து, ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா-கிரேஸ் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம், பெற்றோர்களின் உலகத்திற்கும் குழந்தைகளின் உலகத்திற்கும் நடக்கிற உரையாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, இப்படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கிரேஸ் ஆண்டனி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். விழாவில் இயக்குநர் ராம் பேசும்போது,

‘நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படம் திரைக்கு வர வேண்டும் என்பதில் என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் ஆர்வமாக இருந்தார்கள்.

சினிமா என்பது கணிக்க முடியாத விளையாட்டு. சமகால தலைமுறையினருடன் இந்தப் படம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் என்னுடைய படக்குழுவினர் அனைவருக்கும், என் மீது நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுக்கும் நன்றி’ என்றார்.

cinema is an unpredictable game says director ram
cinema is an unpredictable game says director ram