தமிழ் திரையுலகில் உள்ள பெண் பிரபலங்கள் தற்போது தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி மனம் திறந்து பேசி வருகிறார்கள். பிரபல பாடகியான சின்னமயி திடீரென அடுக்கடுக்கான பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் வைரமுத்து உங்களை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டும் நீங்கள் உங்களது திருமணத்தில் அவரது காலை தொட்டு தொட்டு வணங்குவது ஏன் என வீடியோ ஒன்றை வெளியிட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு சின்னமயி அப்போது இந்த பாலியல் தொடர்பான சம்பவங்கள் என்னுடைய கணவருக்கோ அல்லது உறவினர்களுக்கோ தெரியாது. வைரமுத்துவின் இரு மகன்களும் எங்களுக்கு நெருக்கமான நண்பர்கள்.

அவர்களை திருமணத்திற்கு அழைக்கும் போது அவர்களுடைய அப்பாவை அழைக்காமல் எப்படி இருக்க முடியும் என தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார்.