பாடகி சின்மயி தன்னை கலாய்த்து கமென்ட் செய்த நபர்களை குறித்து தனது twitter பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்தவர் தான் சின்மை. இவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடலைப் பாடி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதற்குப் பின்பு இவர் எனக்கும் உனக்கும், பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல படங்களில் உள்ள பாடல்களை பாடியுள்ளார்.

அதிக அளவில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பிலேயே நிறைய பாடல்களை பாடி இருக்கும் இவர் பிரபல பின்னணி பாடகியாக வலம் வர ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல் இவர் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார். இவர் மே 06, 2014 அன்று பிரபல நடிகரான ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்பும் சினிமா துறையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் தனது பணிகளை சிறப்பாக செய்து வந்த சின்மை திடீரென்று பல சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக இவர் கவிஞர் வைரமுத்துவை பற்றி அவதூறாக பல இடங்களில் பேசியுள்ளார்.

அதனை தற்போது வரை தொடர்ச்சியாக செய்து வரும் சின்மையை நெட்டிசன்கள் சமூக வலைதள பக்கங்களில் கிண்டலும், கேலியுமாக பேசி பல கமெண்ட்களை அளித்து வருகின்றனர். அந்த வகையில் சிலர் அளித்துள்ள கிண்டலான கமெண்ட்களை பாடகி சின்மை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த மாதிரி ஜந்துக்களுக்கு தமிழ்நாட்டுல குறைவே கிடையாது என அவர்களது கமெண்டை புகைப்படமாக வெளியிட்டு பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.