திரை துறையில் உள்ள பெண் பிரபலங்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி தற்போது தைரியமாக பேசி வருகின்றனர். இதற்காகவே #MeToo என்ற ஹேஸ்டேக்கையும் உருவாக்கியுள்ளனர்.

பிரபல பாடகியான சின்மயீ வைரமுத்து, அஜித் பட டான்ஸ் மாஸ்டர் என அடுத்தடுத்து பலரின் பெயர் அடிபட்டு வருகிறது. இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சமயத்தில் தமிழிசை சௌந்தராஜன் இது குறித்து ட்வீட் செய்து மறைமுகமாக விஜய் மற்றும் பல திரையுலக பிரபலங்களை விமர்சனம் செய்துள்ளார்.

https://platform.twitter.com/widgets.js

அதாவது அவரது டீவீட்டில் பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது.அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர், நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்?? என கேள்வி எழுப்பி பா.ஜ.க-வை விமர்சிக்கும் பிரபலங்களை சீண்டியுள்ளார்.