Cheteshwar Pujara
Cheteshwar Pujara

Cheteshwar Pujara  – மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனையை படைதார் புஜாரா.

இதுவரை புஜாராவின் அதிகபடியான சதம் 16-ஆக இருந்தது. இந்த சதத்தின் மூலம் அது 17-ஆக உயர்ந்தது.

மேலும் இந்த சாதனையின் மூலம் சவுரவ் கங்குலியின் சாதனையும் இவர் முறியடித்து இருக்கிறார்.

3-வது டெஸ்ட் போட்டியில் 100 ரன்களை கடந்தும் ரன் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இவரை தொடர்ந்து கோலி மற்றும் சர்மா இருவரும் அரை சதம் அடித்தனர்.

சவுரவ் கங்குலி 16 சதம் அடித்து இருந்ததே இது வரை பெரிய சாதனையாக இருந்தது. அதனை இப்போது புஜாரா முறியடித்து உள்ளார்.

அதோடு மட்டும் இல்லாமல் லட்சுமண் அவர்களின் சாதனையை தற்போது சமன் செய்து உள்ளார் புஜாரா.

மற்றும் இந்த சதத்தின் மூலம், பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 5-வது வீரர் என்ற பெருமையும் பெற்றார். சச்சின், சேவாக், ரஹானே, கோலி ஆகியோர் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் தொடர்ந்து இது போன்ற சாதனைகள் படைப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.