Chess

Chess : முதல் முறையாக ‘ டாடா ஸ்டீல் இந்தியா ‘ செஸ் தொடர் நடந்தது. இதில் இந்தியாவின் சிறந்த வீரர்கள் பங்கு பெற்றனர்.

விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜராத்தி, அமெரிக்காவின் நகமுரா உள்ளிட்ட 10பேர் கலந்துகொண்டனர்.

இதன் ‘ரேபிட்’ பிரிவில் 7-வது சுற்றில் ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாக்கினிடம் தோல்வியடந்த இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, 8-வது சுற்றில் ஆர்மேனியாவின் லெவான் ஆரோனியனை வீழ்த்தினார்.

தொடர்ந்து முன்னேறிய ஹரிகிருஷ்ணா தனது 9-வது சுற்றில் விதித் சந்தோஷ் குஜராத்தியை தோற்கடித்தார். இது இத்தொடரில் இவரின் கடைசி சுற்று.

மற்றும் தனது முதல் 8 சுற்றுகள் ‘டிரா’ செய்த ஆனந்த், 9-வது சுற்றில் சூர்ய சேகர் கங்குலியிடம் தோல்வியடைந்தார்.

இத்தொடரின் முதல் இடம் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவும், இரண்டாம் இடதில் ஹரிகிருஷ்ணாவும் மற்றும் மூன்றாவது இடத்தை ஆர்மேனியாவின் ஆரோனியன் பிடித்தனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.