chennai rains affected vettaiyan box office very much great escape for suriyas 'kanguva' movie..
chennai rains affected vettaiyan box office very much great escape for suriyas 'kanguva' movie..

தமிழகத்தில், தற்போது ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக ‘வேட்டையன்’ திரைப்பட ம் எதிர்பார்த்த வசூலை பெறுமா? இப்படம், லைகாவுக்கு லாபகரமாக அமைந்ததா? என்ற தகவலைப் பார்ப்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் கன்டென்ட் மற்றும் கமர்ஷியல் ‘மாஸ்’ படமாக வெளியான நிலையில், தொடர்ந்து படம் தீபாவளி வரை ஓடும்; மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.

லைகாவுக்கு கைகொடுக்கும் விதமாக, முதல் 4 நாட்களில் 240 கோடி வசூலை ‘வேட்டையன்’ படம் ஈட்டியுள்ளது. ஆனால், இதற்கு பிறகு வேட்டையன் படத்தின் வசூல் அதிகரிக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

காரணம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

‘வேட்டையன்’ படத்தின் 5-வது நாளிலேயே கனமழை காரணமாக சிக்கல் வந்துள்ளதா?. தற்போது, தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக 2-வது வாரத்தில் வசூலுக்கு பாதிப்பா? என்றால், முதல் வாரத்திலேயே ரஜினிகாந்தின் ஸ்டார்டம் காரணமாக, படத்தின் பட்ஜெட்டை விட அதிக வசூலை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்த படத்தையும் பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது. ‘வேட்டையன்’ படம், லைகாவுக்கு லாபகரமான படம் தான் என்றும் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்க வேண்டிய படம், மழை காரணமாக கொஞ்சம் தத்தளிப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள நிலையில், பொறுமையாக வரும் நவம்பர் 14-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். கன மழையின் காரணமாக கங்குவா படம் தள்ளிப்போக வாய்ப்பில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நினைப்பது போல ‘கங்குவா’ 2000 கோடி வசூல் என்கிற இமாலய சாதனையை எட்டுகிறதா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

எந்த காரியத்திற்கும் இயற்கையின் ஒத்துழைப்பு போல, இணையேது.?