ஒரு வழியாக பார்வதி, ஆதிக்கு போன் செய்து சாப்பிடச் சொல்கிறாள். இருவரும் போன் பேசிக் கொண்டே சாப்பிடுகின்றனர். ஆதி, பார்வதிக்கு தன்னம்பிக்கைக் கொடுக்கும் வகையில் பேசுகிறார்.

பார்வதி வீட்டின் வெளியே நின்று பேசிக்கொண்டிருப்பதை பார்த்த ஐஸ்வர்யா, உடனே வனஜாக்கு போன் செய்கிறாள். பார்வதி, இந்த நேரத்தில் யாரிடம் பேசுகிறாள்? என்று ஐஸ்வர்யா, வனஜாவடம் கேட்கிறாள். அதற்கு வனஜா எல்லாம் அந்த ஆதியிடம் தான் பேசுவாள்.விடு ஐஸ்வர்யா அவளை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்கிறாள்.

மறுநாள் பார்வதி ,அகிலா வீட்டிற்கு வேலைக்கு வருகிறாள்,அவளைப் பார்த்தவுடன் ,ஐஸ்வர்யாவும், வனஜாவும் எப்படியாவது இவளை அகிலாவிடம் சிக்கவைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக ஐஸ்வர்யா, பார்வதியிடம் உன் போனைக் கொஞ்சம் கொடுக்கிறாயா? ஒரு போன்கால் செய்ய வேண்டும் . என் போனில் கால் போகவில்லை அதனால் தான் கேட்கிறேன் என்றாள்.

பார்வதி, உடனே தன் போனைக் கொடுக்கிறாள்.ஆனால் பயந்த மனதுடன நிற்கிறாள். ஐஸ்வர்யா, பார்வதியின் ஸ்மார் போனைப் பார்த்தவுடன் ,இந்த போனை நீ வாங்கினாயா? யாராவத வாங்கிக் கொடுத்தார்களா? என்று நவஞ்சமாக கேட்கிறாள். அதற்கு பார்வதி நான் தான் வாங்கினேன், என்கிறாள். மேலும் ஏளனமாக பார்வதியை பார்த்து உனக்கு இந்த போனை பயன்படுத்த தெரியுமா? என்று கேட்கிறாள். இதனை கேட்ட அகிலா, ஏன்? பார்வதிக்கு இந்த போனை பயன்ப்படுத்த தெரியாதா எல்லாம் தெரியும் என்று கோபமாக சொல்கிறாள்.

பார்வதிக்கு இதை கேட்டு சற்று ஆறுதல் அடைகிறாள். ஐஸ்வர்யா ,பார்வதியின் போனை வைத்துக் கொண்டு, போன்கால் இதிலிருந்து வரும், அதுவரை உன் போனை நான் வைத்துக் கொள்கிறேன் என்கிறாள். இதை கேட்ட பார்வதி, சரிங்க அம்மா என்கிறாள். ஆனால் மனதில் கடவுளே என்னை காப்பாற்று என்று வேண்டுகிறாள். ஐஸ்வர்யாவிடம் மாட்டி கொள்வாளா பார்வதி? ஆதி -பார்வதி காதல் அகிலாவுக்கு தெரிந்து விடுமா?அடுத்த பகுதியில் பார்க்கலாம்.