குக் வித் கோமாளி நடுவர் செஃப் தாமு இளம் வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.
இந்த முறை ரக்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. நடுவர் செஃப் தாமுவையும் எல்லாரும் அப்பா அப்பா என கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் செஃப் தாமு கல்யாணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அப்பா நீங்களா இது என ஆச்சரியத்துடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.