இரட்டை குழந்தைக்கு அம்மாவாகியுள்ளார் சன் டிவி சீரியல் நடிகை.

Chandrasekhar Swetha Blessed with Twin Baby : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் சந்திரலேகா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்தவர் ஸ்வேதா. சந்திராவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர் கர்ப்பமாக இருந்து வந்தார்.

தன்னுடைய கணவருடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்று இருந்த நிலையில் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாகியுள்ளார்.

ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் பிறந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.