விஷால் தயாரித்து நடித்துள்ள சக்ரா படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Chakra Movie Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சக்ரா.

எம்.எஸ் ஆனந்தன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

சென்னையில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 50 வீடுகளில் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கின்றனர். அந்த 50 வீடுகளில் விஷால் வீடும் ஒன்று, அவரது பாட்டி திருடர்களால் தாக்கப்பட்டதால் மயக்கம் அடைந்து விடுகிறார்.

சுதந்திர தினம் என்பதால் போலிசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் திருடர்கள் தப்பித்து விடுகின்றனர். அதன் பின்னர் மிலிட்டரி மேனான விஷால் இந்த தகவல் அறிந்து வீடு திரும்புகிறார். அவரது வீட்டில் தன்னுடைய அப்பாவின் சக்ரா விருதும் திருடு போயிருப்பது தெரிய வருகிறது. இதனால் தன்னுடைய காதலியும் போலிஷ் அதிகாரிதியுமான ஷ்ரத்தா ஸ்ரீநாத் உதவியுடன் திருடர்களை பிடிக்க முயற்சிக்கிறார். அப்போது அவருக்கு கிடைக்கும் ஆதாரங்களால் அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பின்னர் கொள்ளையர்களையும் அவர்கள் பின்னால் இருக்கும் முக்கிய புள்ளிகளையும் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

விஷால் துடுக்கான மிலிட்டரி ஆபிசராக கலக்கியுள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்ற கதாநாயகிகளை போல இல்லாமல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

அதே போல் ரெஜினா கஸன்ட்ராவும் அவருடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

இசை :

யுவனின் பின்னணி இசை பிரமாதம். பாடல்கள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு : பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளது.

தம்ப்ஸ் அப் :

1. விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பு

2. யுவன் இசை

3. இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

1. சில லாஜிக்கல் தவறுகள்