Chahal Neymar
Chahal Neymar

Chahal Neymar – இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச விரும்புவதாக சூழல் பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தற்போது அஸ்வின், ஜடேஜா, குல்தீப், சாஹல் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

இவர்களில் முன்னணி வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா டெஸ்ட் அணியில் ஆடி வருகின்றனர்.

இதே போல் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான இந்திய அணியில் குல்தீப், சாஹல் கூட்டணி விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் சாஹளுக்கு டெஸ்ட் அணியில் இதுவரை இடம் கிடைத்ததில்லை.

ஏனெனில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி வருவதால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

தற்போது ரஞ்சி போட்டியில் விளையாடி வரும் சாஹல், சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது :

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தனது நீண்ட நாள் கனவு என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அஸ்வின்-ஜடேஜா போன்றோர் கடந்த 8 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவேன் என நம்பிக்கை உள்ளது.

ஏனெனில் கடந்தாண்டு நடைபெற்ற தொடர்களில் நானும் குல்தீப் சிறப்பாக பந்து வீசினோம். சில போட்டிகளில் அணியின் வெற்றிக்கு எங்களது பந்து வீச்சு உதவியது. என்று கூறினார்.