
Central team discussion with CM – சென்னை தலைமை செயலகத்தில் முதல்வருடன் புயல் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும், முதல்வருடன் ஆலோசனை நடத்துவதற்கு முன்னர், மத்திய குழுவினர் வருவாய்த்துறை, நிதித்துறை, வேளாண்துறை ஆகிய துறையின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அந்த ஆலோசனையில், “மத்திய குழிவினருக்கு கஜா புயல் குறித்தும், கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகள் குறித்தும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களுடன் விளக்கி கூறப்பட்டன”.
மேலும் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று சில குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களிடம் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிய உள்ளனர்.
இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் சூரைகாற்றல் வேரோடு சாய்துள்ளன.
மேலும் புயல் தாக்கி ஒரு வாரம் ஆகியும், இன்னும் புயல் பாதித்த சில இடங்களுக்கு எந்தவித நிவாரண உதவியும் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக, புயல் நிவாரண பணி மற்றும் மீட்பு நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை கேட்டு முதல்வர் எடப்பாடி நேற்று பிரதமரை சந்தித்து,
15 ஆயிரம் கோடி நிதி கேட்டார், மேலும் தற்காலிகமாக 1500 கோடி நிதி வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் மத்திய குழு புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த உள்ளது.