மறைந்த நடிகர் விவேக்கை கௌரவிக்க மத்திய அரசு புதிய திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் உள்ளது.

Central Government Respect to Vivekh : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் விவேக். நடிகராக மட்டுமில்லாமல் அப்துல் கலாமின் கனவான பசுமை இந்தியா திட்டத்தை நிறைவேற்ற அயராது உழைத்தவர். தமிழகம் முழுவதும் பசுமையை உருவாக்க லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டவர்.

இவர் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் உடனே தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதை அடுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த நடிகர் விவேக்கை கௌரவிக்க மத்திய அரசின் புதிய திட்டம் - வரவேற்கும் ரசிகர்கள்.!!

இவருடைய மறைவு திரையுலகிலும் தமிழக மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்களும் நடிகர் விவேக் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர்.

விவேக்கின் சமூக அக்கறையை போற்றும் வகையில் மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால்தலை வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அடுத்த மாதம் விவேக் புகைப்படத்துடனான தபால்தலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவேக் அவர்களின் சமூக சேவையைப் பாராட்டும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.