Sarkar Celebrity Support

Sarkar Celebrity Support : தளபதி விஜயின் சர்கார் படத்திற்கே எங்களது ஆதரவு என திரையுலக பிரபலங்கள் பலரும் டிவீட்ஸ் செய்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி என பலர் இணைந்து நடித்திருந்த படம் சர்கார்.

தீபாவளிக்கு வெளியான இந்த படத்திற்கு எதிராக ஆளும் கட்சியான அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

காரணம் இப்படத்தில் ஜெயலலிதாவின் பெயரும் அவருடைய இலவச பொருட்களையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது தான்.

இதனால் அதிமுக அரசு படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.

இது குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி, கமல் ஆகியோர் சர்கார் படத்திற்கு ஆதரவு கொடுத்திருந்ததை அடுத்து மேலும் சில பிரபலங்கள் கருத்து கூறியுள்ளனர்.

காமெடி நடிகையான வித்யூலேகா என்னுடைய ஆதரவ சர்கார் படத்திற்கு தான். படத்தை மக்கள் படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் சி.எஸ் அமுதன் அவர்களும் தன்னுடைய ஆதரவு சர்கார் படத்திற்கு தான் என டீவீட்டியுள்ளார்.