தளபதி விஜயின் பிறந்தநாளான இன்று பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
விஜயின் பிறந்த நாளான இன்று லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் விஜயின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.