மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருந்த செக்க சிவந்த வானம் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. இந்த படத்தின் நாயகர்களாக நடித்துள்ள சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி என அனைவர்க்கும் மிக சிறந்த வெற்றி படமாக இப்படம் அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதல் வார பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
முதல் வார முடிவில் மட்டும் உலகம் முழுவதும் சேர்த்து ரூ 72 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழக்தில் மட்டுமே படம் ரூ 38 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.