சூர்யா 42 திரைப்படத்தில் நடிக்க ஆட்கள் வேண்டி படக்குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கை வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

மொத்தம் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை எண்ணூர் துறைமுகம் மற்றும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பிஜி தீவில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஆட்கள் வேண்டி படக்குழு வெளியிட்டு இருக்கும் அறிக்கை வைரலாகி வருகிறது. அதன்படி அந்த அறிக்கையில், நடிக்க நல்ல உடல்வாகு, தாடி மற்றும் நீண்ட தலைமுடி உள்ள பாடி பில்டர்கள் தேவை என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.