கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தரமான அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக கடந்த 17ஆம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது.

இந்த தகவலை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வரும் நிலையில் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 1930களின் பின்னணியில் நடக்கும் கதையாக ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் குறித்து தரமான தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ளதாக தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.