தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரபல அமெரிக்க நடிகர் இணைந்திருப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தில் ஏற்கனவே பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷான், கன்னட நடிகர் சிவராஜ்குமார் என பல உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதால் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களின் இடையே அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில் மேலும் இப்படத்தில் இணைந்திருக்கும் புதிய பிரபலம் குறித்த அறிவிப்பை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இப்படத்தில், தெலுங்கில் பல விருதுகளை குவித்த RRR படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமான பிரபல அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக் இணைந்திருப்பதாக படக்குழு போஸ்டருடன் அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அதிக எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர்.