Capmaari Anthem
கேப்மாரி படத்தில் இருந்து கேப்மாரி ஆன்தம் என்ற பெயரில் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் ஆசானாக வலம் வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் தற்போது தன்னுடைய 70-வது படமாக கேப்மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஜெய், அதுல்யா, வைபவி சாண்டிலா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 6-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் இருந்து உசுப்பேத்துறவன் கிட்ட ம்ம்னு இருக்கணும் என்ற பெயரில் பாடல் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது கேப்மாரி ஆந்தம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.