கும்பகோணத்தில் நடைபெற்ற கேக் திருவிழாவில் ஆள் உயரத்தில் இருக்கும் அஜித் விஜய் போல் அச்சு அசலாக தயாரிக்கப்பட்டிருக்கும் கேக் குறித்த வீடியோ ஆச்சரியப்படுத்தி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவர்களின் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகி நேரடியாக மோதிக்கொண்டது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இரண்டு திரைப்படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது கும்பகோணம் அருகே உள்ள பாபநாசத்தில் கேத் திருவிழா நடைபெற்றது, அதில் அஜித் மற்றும் விஜய் இணைந்து இருப்பது போல் ஆள் உயரத்திற்கு கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வைரலாகி வருகிறது.