C.A.Bhavani Devi Record
C.A.Bhavani Devi Record

C.A.Bhavani Devi Record – காமன் வெல்த் வாள் சண்டை சாம்பியன் ஷிப் போட்டி ஆஸ், உள்ள கான்பெராவில் நடைபெற்று வருகிறது.

இதன் சீனியர் “சேபர்” பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சி.ஏ.பவானி தேவி பங்கேற்றார்.

அவர் கால் இறுதியில் ஆஸ்திரேலியா வீராங்கனை கெய்ட்லினை 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரை இறுதியில் 15-5 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து நாட்டு வீராங்கனையை வெற்றி பெற்றார்.

இறுதி போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை எமிலி ராக்சுடன் மோதினார், 15-12 என்ற கணக்கில் எமிலியை வெற்றி பெற்றார்.

இதன் மூலம் காமன்வெல்த் வாள் சண்டையில் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானி தேவி படைத்தார்.

மேலும், பவானி தேவி உலககோப்பை சேட்லைட் போட்டியில் தங்கம் வென்றது குறிப்பிட தக்கது.

முதல் முறையாக தங்கம் வென்ற பவானி தேவிக்கு உலகம் முழுவதில் இருந்து ரசிகர்கள் மத்தியிலும் பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றதாம்.