நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் அம்மாவை நினைத்து உருக்கமான பதிவை பகிர்ந்து இருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவுக்கு பின் அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கி இருக்கும் ஜான்விகபூர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனது அம்மாவை நினைவு கூர்ந்து வருத்தத்துடன் வெளியிட்டு இருக்கும் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதில் அவர், ‘இன்னும் உங்களை எல்லா இடங்களிலும் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் அம்மா, உங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து செயல்களையும் செய்து வருகிறேன். நான் எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அதன் தொடக்கமும் முடிவும் நீங்கள்தான்’ என்று குறிப்பிட்டு இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.