பார்த்திபனின் “இரவின் நிழல்” திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதில்லை என்று ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவு வைரலாகி வருகிறது.

‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார் ரோபோ சங்கர் பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர். குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த இரவின் நிழல் என பார்த்திபன் பல்வேறு பேட்டிகளில் கூறி இருந்தார்.

இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நேற்றைய தினம் உலகம் எங்கும் ரிலீசானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் பார்த்திபனை பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படத்தின் மூலம் நடிகர் பார்த்திபனுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து சர்ச்சை பதிவு ஒன்றை ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் இந்த “இரவின் நிழல்” திரைப்படம் தான் உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் என்று பார்த்திபன் கூறியது உண்மையல்ல.! என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு Fish &Cat என்கிற ஈரானிய திரைப்படம் கடந்த 2013-ம் ஆண்டே Non Linear முறையில் சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த சர்ச்சைக்குரிய பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.l