“இரவின் நிழல்” திரைப்படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனின் உருவப்படத்திற்கு புதுச்சேரி ரசிகர்கள் செருப்பு மழையை அணிவித்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

‘ஒத்த செருப்பு’ படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் தான் “இரவின் நிழல்”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி சரத்குமார் ரோபோ சங்கர் பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை புதிய முயற்சியாக 94 நிமிடம் 36 நொடிகளில் ஒரே ஷாட்டில் படமாக்கி உள்ளனர்.

குறிப்பாக உலகிலேயே Non Linear முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இந்த இரவின் நிழல் என பார்த்திபன் பல்வேறு பேட்டிகளில் கூறி இருந்தார். இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்தப் படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை முதலில் வந்தது ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட Fish & Cat என்கின்ற ஈரான்யா திரைப்படம் தான் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இவரின் இந்த சர்ச்சை பதிவிற்கு இன்று புதுச்சேரி கடலூர் சாலையில் ப்ரோவிடன்ட் மால் தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்த நடிகர் சங்கம் நிர்வாகிகள் மற்றும் பார்த்திபனின் ரசிகர்கள் தவறாக பேசிய ப்ளூ சட்டை மாறனின் உருவப்படத்திற்கு செருப்பு மாலையை அணிவித்து தீயிட்டு எரித்து காலால் உதைத்தனர். இதற்கு ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் புதுமையான பாராட்டிற்கு நன்றி பார்த்திபன் சார். உங்கள் நாகரீகம் செயல் தொடரட்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.