BJP Union minister Pon Radhakrishnan
BJP Union minister Pon Radhakrishnan

BJP Union minister Pon Radhakrishnan – நாகர்கோவில்: நாகர்கோவிலில் நடைபெற்ற, பிரதமரின் ‘மன் கி் பாத்’ ஒலிபரப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் கூறுகையில், “கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்போது மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர் .

அவர்களது ஆய்வின் முடிவின்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் ‘கஜா புயலின் பாதிப்புக்கு மாநில அரசு 15000 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசிடன் கேட்டுள்ளது.

இதன் படி, மத்திய குழுவினர் அறிக்கை விவரம் முழுவதும் கிடைத்த பின்னர்தான் கஜா புயலை தேசிய பேரிடர் ஆக அறிவிப்பது குறித்த விபரங்கள் தெரியவரும்’.

மேலும், புயலால் பாதிக்கப்பட்ட சேதங்களுக்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை என்று கூறிவிட முடியாது,

மத்திய அரசு என்பது பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சேர்ந்தது மட்டுமல்ல, இதில் மத்திய குழுவின் அறிக்கையை சார்ந்துதான் முடிவுகள் எடுக்க முடியும்.

இந்நிலையில், கஜா புயல் பாதித்த இடங்களை நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இதனுடைய தாக்கம் முழுமையாக ஆய்வு செய்த பின்னர் தான் தெரியவரும். மேலும் நிவாரணம் வந்தது என்றும் வரவில்லை என்றும் ஒரே முகாமில் உள்ளவர்கள் கூறுகின்றனர்” இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.