Diwali 2018 Cause

BJP MP : தீபாவளி அன்று வெடி வெடிப்பதற்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளையும் விதித்தது.

அதாவது, தீபாவளி அன்று இரவு 8 முதல் 10 மணி வரை மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என நேற்று. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கு ம.பி மாநிலம் , உஜ்ஜெயினி தொகுதியின் பா.ஜ.க எம்பி., சிந்தாமணி மாளவியா இந்த தீர்ப்புக்கு எதிராக ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அதாவது, ” நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன் , இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசு வெடிப்பேன். இந்து பாரம்பரியத்தில் பிறர் தலையீட்டை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்” .

என் மத பாரம்பரியத்தை பின்பற்ற சிறை செல்ல நேர்ந்தால் கூட சந்தோஷப்படுவேன். விழாக்களை கொண்டாட காலநேரம் நிர்ணயிப்பது என்னால் ஏற்று கொள்ள முடியாது. ” முகலாயர் காலத்தில் கூட இந்துக்களின் விழாக்களில் எந்த தடையும் விதிக்கப்பட்டது இல்லை” இவ்வாறு தெரிவித்தார்.

BJP-MP-Chintamani-Malviya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.