
ஜப்பான் படம் போடாதது முன்னாடியே தெரியும் என கூறியுள்ளார் பிஸ்மி.
தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை இன்று வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பத்திரிக்கையாளர் பிஸ்மி.

இவர் கார்த்தி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவிய ஜப்பான் திரைப்படம் பற்றி பேசி ஒன்று பேசி உள்ளார். ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் ஓடாது என்று எனக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறியுள்ளார்.
ஜப்பான் படத்தின் அறிவிப்பு வெளிவந்த போது அதன் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. அதற்கான ஒரே காரணம் இயக்குனர் ராஜூமுருகன் தான். ஜோக்கர் படத்தைப் போல இந்த படத்திலும் ஏதாவது சமூகக் கருத்தை வைத்து கொண்டு செல்வார் என எதிர்பார்த்தேன்.

அதன் பிறகு படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியானதும் அந்த நம்பிக்கை குறைய தொடங்கியது. மேலும் கார்த்தி நகை கடையில் கொள்ளை அடிக்கும் அடிப்பதாக தகவல் வெளியானதும் நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டது என தெரிவித்துள்ளார்.