Billa Pandi Tamil Review : ராஜ் சேதுபதி இயக்கத்தில் கே.பிரபாத் தயாரிப்பில் ஆர்.சுரேஷ், சாந்தினி, இந்துஜா, தயாரிப்பாளர் கே.சி பிரபாத், தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பில்லா பாண்டி.
ஆர்.கே சுரேஷ் நாயகனாக அவதாரம் எடுத்துள்ள இந்த படத்தில் அவர் முழுக்க முழுக்க தல ரசிகனாகவே வாழ்ந்துள்ளார். தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் வில்லனாக மிரட்டியுள்ளார்.
சாந்தினி, இந்துஜா ஆகியோர் நாயகிகளாக நடிக்க தம்பி ராமையா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கதைக்களம் : படத்தின் நாயகன் ஆர்.கே சுரேஷ் தான் என்றாலும் மெயின் ஹீரோ தல அஜித் தான் என்றால் அது மிகையாகாது. தல அஜித்தின் ரசிகர் மன்ற தலைவரான ஆர்.சுரேஷ் அஜித்தின் புகைப்படத்தை தன்னுடைய வீட்டு பூஜையறையில் வைத்து கும்பிடும் அளவிற்கு தல பக்தனாக நடித்துள்ளார்.
பில்லா பாண்டி ( ஆர்.கே சுரேஷ் ) சாதாரண கட்டுமான தொழில் செய்து வரும் தொழிலாளி. இவர் தன்னுடைய மாமன் மகளான சாந்தினி மீது காதல் கொண்டுள்ளார். சாந்தினிக்கும் ஆர்.கே சுரேஷ் மீது காதல்.
ஆனால் இவர்களின் காதல் பில்லா பாண்டி மாமாவுக்கு பிடிக்கவில்லை. மேலும் மற்றொரு நாயகியான இந்துஜா பில்லா பாண்டியை ஒரு தலை பட்சமாக காதலிக்கிறார்.
இதனையறிந்த இந்துஜாவின் அப்பா பில்லா பாண்டியை அடித்து விரட்டி விடுகிறார். இறுதியில் பில்லா பாண்டி ஷாந்தினி, இந்துஜா இவர்களில் யாருடன் ஜோடி சேர்கிறார்? என்பது தான் படத்தின் கதைக்களம்.
ஆ.கே.சுரேஷ் : பில்லா பாண்டியான ஆர்.கே.சுரேஷின் நடிப்பு தல ரசிகர்களை பூரிப்படைய செய்யும் வகையில் உள்ளது. படம் முழுவதும் தல பக்தனாகவே வாழ்ந்திருப்பது அற்புதம்.
கே.சி பிரபாத் : தயாரிப்பாளரான கே.சி.பிரபாத் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவிற்கு ஒரு புது வில்லன் கிடைத்துள்ளார். நிச்சயம் இனி ஒரு தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் சிறந்த வில்லனாகவும் கோலிவுட்டில் வலம் வருவார் என எதிர்பார்க்கலாம்.
மற்ற நடிகர்கள் :
மேலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சாந்தினி, இந்துஜா, தம்பி ராமையாவின் நடிப்பு பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் : இசையமைப்பாளர் இளையவனின் இசை ரசிக்கும் படியாகவும் பாடல்கள் மனதில் பதியும் படியாகவும் அமைந்துள்ளன.
ஒளிப்பதிவாளர் எம். ஜீவன், எடிட்டர் ராஜா முஹம்மத் ஆகியோர் தங்களின் பணிகளை செவ்வனே செய்து கொடுத்துள்ளனர்.
இயக்குனர் ராஜ் சேதுபதி : காட்சிக்கு காட்சி தல ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அழகான கோர்வையாக கோர்த்து படம் முழுவதையும் விறுவிறுப்பாக கொடுத்துள்ளார்.
தம்ஸ் அப் :
1. ஆர்.கே சுரேஷ் தல ரசிகனாகவே வாழ்ந்துள்ளார். பல காட்சிகள் பூரிப்படையும் வகையில் அமைந்துள்ளன.
2. வில்லனாக நடித்துள்ள கே.சி பிரபாத் நடிப்பு
3. எங்க குல தெய்வம் பாடல்
தம்ஸ் டவுன் :
1. காட்சிக்கு காட்சி அஜித் ரெபெரென்ஸ் இருப்பதை கொஞ்சம் குறைத்திருந்தால் அஜித் ரசிகர்களுக்கு படம் திகட்டாமல் இருக்கும்.