நாங்க ஜெயிப்போம் என கைதி படக்குழுவினர் சொன்னபடியே செய்து காட்டியுள்ளனர்.
பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் பொங்கல், தீபாவளி தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை குறி வைப்பது என்பது வழக்கமான ஒன்று.
இந்த வருட தீபாவளிக்கும் அப்படி தான் பல படங்கள் குறி வைத்திருந்தாலும் இறுதியில் கைதியும் பிகிலும் நேருக்கு நேர் மோதி கொண்டன.
விஜயின் பிகில் திரைப்படம் எப்படியும் பல தியேட்டர்களை பிடித்து விடும், அப்படியிருந்தும் பிகிலுடன் எப்படி துணிந்து மோதுகிறீர்கள் என கேட்டதற்கு எங்கள் படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்ற ஒத்த பதிலை தான் கூறினார்கள்.
அவ்வளவு ஏன் கார்த்தி கூட ஒரு பேட்டியில் கூட எங்கள் படத்தில் நல்ல கதை இருக்கு, மக்கள் நிச்சயம் பிடிக்கும் நாங்க ஜெயிப்போம் என உறுதியாக கூறினார்.
படக்குழு கூறிய படியே மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது கைதி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதி படத்தின் விமர்சனங்கள் விஜய் ரசிகர்கள் மத்தியில் தளபதி 64 படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகமாக்கி வருகின்றன என்பது தான் நிசப்தமான உண்மை.
அதே போல் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வெறித்தனமான வெற்றியை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.