Bigil Trolls
பிகில் படத்தின் ட்ரைலரில் கேக்கல கேக்கல என விஜய் கூறியதை விஜய் படங்களோடு ஒப்பிட்டு ரசிகர்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 25-ம் தேதி முதல் திரைக்கு வர உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் கடந்த அக்டோபர் 12-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வெறித்தனமான சாதனைகளையும் படைத்தது.

அதே சமயம் ட்ரைலரில் இடம் பெற்றிருந்த சில காட்சிகள் நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்கும் ஆளானது. தற்போது அப்படி தான் விஜய் கேக்கல கேக்கல என கூறிய காட்சி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

இதே பாணியில் விஜய் கில்லி படத்தில் ஒரு காட்சியிலும் சச்சின் படத்தின் ஒரு காட்சியிலும் நடித்துள்ளார். இந்த மூன்று காட்சிகளையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் அப்போதில் இருந்தேவா கேட்கல என கலாய்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.